நேற்றைய தினம் (16.12.2024 திங்கட்கிழமை) கதிரவெளி பகுதியில், வாகரை பிரதேச காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயலமர்வு சட்டத்தரணி சந்திரகுமார் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
வாகரை பிரதேசத்தில் காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு உரித்தான காணிகளை மீளப்பெறவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காணி ஆக்கிரமிப்பை தவிர்த்துக் கொள்ளவும் என்ற அடிப்படையில் இச் செயலமர்வானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
AHRC மற்றும் PCCJ அமைப்புகளின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இச் செயலமர்வின் போது, ஆவணங்கள் பரிசீலனை செய்து பொருத்தமான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காகவும் அவர்களின் உரிமைகளை கோருவதற்காகவும் அவர்களின் எல்லைகள் மற்றும் வரலாற்று ரீதியான அடையாளங்களை பாதுகாக்கும் நோக்கில் பாதிக்கப்பட்டவர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த செயலமர்வு மேற்கொள்ளப்பட்டது.