தன்னுடைய சகல கல்வித் தகைமைகளினையும் நாளை (18.12.2024) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று (17.12.2024) தெரிவித்துள்ளார்.
கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாளை காலை, தான் பெற்றிருக்கும் அனைத்து விதமான கல்வித் தகுதிகளினையும் இந்த அவையில் சமர்ப்பிக்க எண்ணியுள்ளதாகவும், பட்டப்படிப்பு சான்றிதழினை மட்டுமல்ல, அதைத் தாண்டிய அனைத்து சான்றிதழ்களினையும் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.