யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அவருக்கு எதிராக Quo Warranto விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது வைத்திய அதிகாரி பதவியை இராஜினாமா செய்யாததால் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என சிவில் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த விவகாரம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, ஜனவரி 15, 2025 அன்று விசாரணைக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஷெனால் பெர்னாண்டோவுடன் சட்டத்தரணி என்.கே. அசோக்பரன் ஆஜரானார்.