24.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

இலங்கையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுநிலை: வடக்கு, கிழக்கில் எங்கெல்லாம் மழை பொழிய வாய்ப்பு?

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை பற்றிய பிந்திய தகவல்களை வெளியிட்டுள்ளார், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா.

அவரது தகவல் வருமாறு-

16.12.2024 திங்கட் கிழமை காலை 10. 00 மணி

கடந்த 14.12.2024 அன்று உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது அம்பாறைக்கு கிழக்காக 340 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கிழக்கு மாகாணத்திற்கு அண்மித்து பின்னர் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணம், தமிழக கடற்பகுதிகளை அண்மித்ததாக இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது( கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை).

இதன் காரணமாக நேற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு கிடைத்த மழை இன்று மாலை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்வரும் 19.12.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நாளையும் நாளை மறுதினமும் அதாவது 17.12.2024 மற்றும் 18.12.2024 திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிகக்கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற் பகுதிகள் எதிர்வரும் 19.12.2024 வரை மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

இன்று அதிகாலை 2.00 மணி முதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் சாரீரப்பதன் அளவில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் 72 வீதமாகவும் கிளிநொச்சியில் 76 வீதமாகவும் மன்னாரின் சில இடங்களில் 77வீதமாகவும் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே இன்று அதிகாலை முதல் குளிரான வானிலை நிலவுகிறது. அதேவேளை திருகோணமலையில் 96 வீதமாகவும், வவுனியாவில் 94 வீதமாகவும் சாரீரப்பதன் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் தற்கொலை

east tamil

ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க – இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

east tamil

யாழில் பேருந்து மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment