25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

11 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சட்டப் பரீட்சையின் போது சலுகை பெற்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.

லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகார அமைப்பின் தலைவர் ஜமுனி சமந்தா துஷாரவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கமந்த துஷார, ராஜபக்ச மோசடியாக சட்டப் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறினார்.

ராஜபக்ச தனது சட்டப் பரீட்சைக்கு தோற்றிய போது தனியறையில் இரண்டு சட்டத்தரணிகள் அவருக்கு உதவியதாக துஷார மேலும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தை சிஐடி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“நாமல் ராஜபக்சவின் சட்டப் பட்டம் மோசடியானது என்பது நிரூபிக்கப்பட்டால், பட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று துஷார கோரினார்.

இதற்கிடையில், சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைகளால் அண்மையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கல்வித் தகுதிக்கான ஆதாரங்களை வழங்க முடியாவிட்டால், அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment