திருக்கோணமலை நகரினுள் உள் நுழைகின்ற பிரதான பாதையாகிய கண்டி வீதியில் மட்கோ சந்தி பகுதியில் இன்று காலை முதல் திருகோணமலையில் பொழிந்த அடைமழை காரணமாக வெள்ளநீர் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக குறித்த பாதையால் பயணிக்கும் வாகனங்கள் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளன.
மேலும், குறித்த பகுதியை அண்டிய வீடுகள், கடைப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளமையினால் அப் பகுதி வாழ் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வடிகால் வசதிகளில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாகவே இவ்வாறு வெள்ளநீர் நிரம்பியுள்ளாதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமைக்கு விரைவில் தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மழைநீர் வடிகால் அமைப்பின் தேவைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.