திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேலூர் திருமுருகன் ஆலயத்தில் நேற்றைய தினம் (15.12.2024) ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் கோயில் ஆலய கருவறை கலசம் மற்றும் விக்கிரகங்கள் உடைத்து அகற்றப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 10ம் திகதி எண்ணெய் காப்பும், அதைத்தொடர்ந்து, 11ம் திகதி திங்கட்கிழமை இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதுபோலவே, கடந்த இரு தினங்ளுக்கு முன்னும் திருகோணமலை அடம்போடை பிள்ளையார் ஆலயத்திலும் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இனமுறுகளை ஏற்படுத்தும் நோக்குடன் திட்டமிட்டு இவ்விடயங்கள் நடைபெறுகின்றனவா என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1