திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையினால் கன்னியா வெந்நீருற்று வளாகத்தில் அபரக்கிரியைகளை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, அதற்கான நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அனுமதி விண்ணப்பப் படிவங்களை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையிடமிருந்து பெற்றுக்கொள்ளமுடியும் எனவும், அபரக் கிரியைகள் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்ட தினத்திற்கு ஒரு வார காலப்பகுதிக்கு முன்னராக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், விண்ணப்பத்துடன் குடும்பத்தாரின் மரண அறிவித்தல் பிரதி, மரணத்தைப்பற்றிக் கிராம சேவையாளரின் அறிவித்தல் பிரதி மற்றும் மரணம் பற்றிய வைத்திய அறிக்கை பிரதி போன்ற ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வாராந்தம் செவ்வாய் கிழமை வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வியாழக் கிழமைகளில் அனுமதி வழங்கப்படும் என திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.