கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் இன்று (16.12.2024 – திங்கட் கிழமை) தனியார் பஸ் ஒன்றில் தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த 17 வயதுடைய பாடசாலை மாணவி பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
விபத்தில் கட்டம்பே மஹாநாம கல்லூரியில் உயர்தரம் கல்வி கற்ற சிறுமி உயிரிழந்துள்ளார் என்றும் மேலதிக வகுப்பிற்காக தந்தையுடன் வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டம்பேயிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1