ஒக்டோபரில் ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான எரிபொருளை உற்பத்தி செய்யும் திறனைக் குறைத்தது என்று பெயரிடப்படாத இஸ்ரேலிய இராணுவ வட்டாரம் தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் கூறியதாக தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரானால் ஒரு நாளைக்கு இரண்டு புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான எரிபொருளை உற்பத்தி செய்ய முடிந்தது, அது இப்போது வாரத்திற்கு ஒன்று என வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த பற்றாக்குறை ஒரு வருடத்திற்கு தொடரும் என்று கருதப்படுகிறது என்று அந்த வட்டாரம் செய்தித்தாளிடம் தெரிவித்தது.
முன்னாள் பாதுகாப்பு மந்திரி Yoav Gallant தி வாஷிங்டன் போஸ்ட்டிடம், ஒக்டோபர் 26 அன்று வான் பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத ஆராய்ச்சி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம், “ஈரான் பலவீனமானது மற்றும் இஸ்ரேல் வலிமையானது” என்பதை உறுதி செய்வதே ஆகும், எதிர்கால தாக்குதல்களிற்கு ஈரானால் பதில் தாக்குதல் நடத்த முடியாமலிருக்கும் என்றார்.
“தெஹ்ரானைச் சுற்றி எந்த மூலோபாய பாதுகாப்பும் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
ஒக்டோபர் 1 ம் திகதி இஸ்ரேல் மீது ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடந்த தாக்குதல்கள், அணு ஆயுதம் தயாரிப்பதற்கு முன்பு “ஈரானுக்கு எதிராக செயல்பட ஒரு சாளரத்தை” உருவாக்கியது என்று கேலண்ட் மேலும் கூறினார்.
ஏப்ரல் 13 அன்று இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்திய பாரிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு விடையிறுக்கும் வகையில், ஈரானின் இஸ்பஹானில் வான் பாதுகாப்பு பேட்டரிக்கான ரேடார் அமைப்பில் ஏப்ரலில் நடந்த தாக்குதலுக்குப் பின்னால் இஸ்ரேல் இருந்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.
“நாங்கள் அவர்களைத் துல்லியமாகத் தாக்கினோம், ஆனால் அவர்களைத் தடுக்க அது போதுமானதாக இல்லை,” என்று அவர் வலியுறுத்தினார்.