பிரான்ஸின் Mayotte தீவில் சீடோ (Chido) சூறாவளியில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உண்டு என்று பிரெஞ்சு உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரையும் அடையாளம் காண்பது கடினம் என்றும் கூறப்பட்டது. பல ஆவணமற்ற குடியிருப்பாளர்கள் நாடுகடத்தப்படுதல் பற்றிய கவலைகள் காரணமாக உதவியை நாடுவதற்கு அஞ்சுகின்றனர்.
சூறாவளியால் கடும் சேதம் ஏற்பட்டது.
மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் அழிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லை.
பாதிக்கப்பட்ட மேயோட்டு தீவுக்கு பிரெஞ்சு அரசாங்கம் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது.
சூறாவளியின் வேகம் அதிகரித்திருப்பதாக வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மொசாம்பிக்கின் (Mozambique) வடக்கே உள்ள பெம்பா (Pemba) நகரில் சூறாவளி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலாவி, சிம்பாப்வே மற்றும் சாம்பியாவில் 1.7 மில்லியன் மக்கள் புயலின் தாக்கத்தால் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.