வவுனியா சேமமேடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணி செய்கின்ற குறித்த இளைஞர் 14.12.2024 சனிக்கிழமை குளத்தின் ஆற்றுப் பகுதிக்கு சென்றும் நீண்ட நேரமாகிய நிலையில் அவரை காணாத நண்பர்கள் தேடியுள்ளனர்.
இந்நிலையில், இன்று (15.12.2024 – ஞாயிற்றுக் கிழமை) காலை குறித்த ஆற்றுப்பகுதியில் இவரது சடலம் மீட்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1