திருகோணமலை மாவட்ட பெண் உரிமை செயற்பாட்டாளர்களால் இன்று (14.12.2024 – ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்யப்பட்டது.
இதில், இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான (CEDOW) சமவாயத்தை இலங்கையில் சட்டமூலமாக உருவாக்கல் தொடர்பிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதோடு, புதிய பதில் சட்டமூலங்களை கொண்டுவராமல் இருப்பதை உறுதி செய்தல் தொடர்பிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாதிப்புகளை தடுத்தல் தொடர்பிலும் பல கோரிக்கைகளை விடுத்திருந்தனர். குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் பெண்களை விசாரணைகளுக்கு அழைக்கும் செயல்களை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.
மேலும், சம்பூரில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டதை குறித்து பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.