30.6 C
Jaffna
April 6, 2025
Pagetamil
இலங்கை

23 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

23 பேரும் இன்று (03) யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதவான் நளின சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்படுத்தப்பட்டனர்.

வழக்கினை ஆராய்ந்த நீதவான் இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

அத்துடன் குறித்த 23 பேரில் 3 பேர் படகோட்டிகள் என்றமையால் அவர்களுக்கு தலா 4 மில்லியன் அபராத தொகையினை செலுத்தும் அதேவேளை 6 மாத சிறைத்தண்டனையும் மேலதிகமாக வழங்கி உத்தரவிட்டார்.

அபராத தொகை செலுத்த தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 3 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

மோடிக்கு உயரிய இலங்கை விருது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!