தாம் யாரையும் தாக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே சஞ்சய் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுஜித் சஞ்சய் பெரேரா-
நான் அவரைத் தாக்கினேன் என்று தீவிர அறிக்கை விடுகிறார். அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் அதை முற்றிலும் மறுக்கிறேன். அவர்தான் என்னை மிரட்டினார்.
நளின் பண்டார (ஐக்கிய மக்கள் சக்தி- குருநாகல் மாவட்டம்)-
யாழ் மாவட்ட சுயேச்சை உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். தகாத வார்த்தைகளையும், ஆபாச வார்த்தைகளையும் கூறினார்.
இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்.
சிலர் படித்தவர்கள் ஆனால் புத்திசாலிகள் அல்ல. இந்த பொருத்தமில்லாத எம்.பி.க்களை எதிர்க்கட்சியில் அமர வைக்காதீர்கள்.