27.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் கோரல்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் உள்ள உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க (திருத்தப்பட்ட) காணாமற்போன நபர்கள் தொடர்பான அலுவலகம் (ஸ்தாபனம், நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்றுதல்) சட்டத்தின் விதிகளின்படி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்காக www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் கா.ஆ.அ. விற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டல் வேண்டும்.

அதற்கமைய, பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்களை 2024 டிசம்பர் 09 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுரவை சந்திக்க முடியாவிட்டால் கழுத்தை அறுப்பேன்: வாளுடன் ரகளை செய்தவர் கைது!

Pagetamil

பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணை இழுத்துச் சென்ற முதலை!

east tamil

இரவு நேர போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபரின் தொடர் விசேட அறிவுறுத்தல்

east tamil

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர்

east tamil

மின் வடங்கள் திருடப்படுவதை தடுக்க போக்குவரத்து அமைச்சின் தீர்மானம்

east tamil

Leave a Comment