நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு பேஸ் லைன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தையடுத்து நபரொருவரை தாக்கி காயப்படுத்தியமைக்காக குறித்த மருத்துவருக்கு எதிராக கிராண்ட்பாஸ் பொலிஸார் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையின் பிரகாரம், கடந்த 26 ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நீதிமன்றத்தில் ஆஜராகி, கடந்த 26ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டதாலும், நீதிமன்றில் ஆஜராக வேண்டிய திகதியை மறந்துவிட்டதாலும் தன்னால் ஆஜராக இயலவில்லை என சட்டத்தரணி ஊடாக தெரிவித்தார்.
இந்த மனுக்களை பரிசீலித்த கூடுதல் மாஜிஸ்திரேட், பிடியாணையை திரும்பப் பெற உத்தரவிட்டார்.