25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

யாழின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள் பொது மண்டபங்கள் நண்பர் மகூறும் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்து தஞ்சம் அடைந்தவர்களுக்கு மாவட்டச் செயலகம் ஊடாக பிரதேச செயலகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலவும் மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்றன.

ஆனாலும் தொடரும் சீரற்ற காலநிலையால் மேலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இன்னும் பல குடும்பங்கள் இடம்பெயருகிற நிலைமை காணப்படுகிறது.

மேலும் சீரற்ற காலநிலை தொடர்வதால் இன்னும் பலரும் பாதிப்படையலாம் என்பதால் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களில் காற்றுடன் கூடியதாக தொடரும் கனமழை காரணமாக பலரும் தரப்பினர்களும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

லிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

பெல்ஜியம் தீ விபத்தில் தமிழ் இளைஞன் பலி

Pagetamil

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சகோதரிகள் பலி

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

‘என்னை சேர் என அழைக்க வேண்டும்’: சைக்கோத்தனமாக நடந்த அர்ச்சுனா திங்கள் கைது?

Pagetamil

Leave a Comment