மேல் கொத்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (27) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நுவரெலியா மற்றும் மேல் கொத்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நீர்த்தேக்கத்தின் எஞ்சிய வான்கதவுகள் திறக்கப்படும் என்பதால் நீர்த்தேக்க அணைக்கு கீழே கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரியுள்ளது.
அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் செயின்ட் கிளேர் மற்றும் டெவோன் அருவிகளின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1