யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.
22.03.2021 அன்று பேஸ்லைன் வீதியில் வைத்து விபத்தை ஏற்படுத்திய அர்ச்சுனா, வாகன சாரதியை கடுமையாக தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன நீதிமன்றத்தை தொடர்ந்தும் தவிர்த்து வருவதனால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வழக்கு விசாரணை நாளன்று அவருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது, ஆனால் பிடியாணைகள் நிறைவேற்றப்படவில்லை.
பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி அசங்க மெண்டிஸ், சட்டத்தரணி ஷெஹான் ராஜபக்ஷ மற்றும் வினுர ஜினதாச ஆகியோர் ஆஜராகினர்.