25.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

வடக்கு மக்கள் போரில் இறந்தவர்களை நினைவுகூருவதை தடுக்க முடியாது: பொதுப்பாதுகாப்பு அமைச்சர்!

வடக்கு மக்கள் போரில் இறந்த தமது உறவினர்களை நினைவுகூரலாம். ஆனால் புலிகள். சின்னத்தையோ சீருடைகளையோ அல்லது படங்களையோ பயன்படுத்தி மாவீரர் நாளை அனுட்டிக்க முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

“இறந்தவர்களை நினைகூரும் உரிமை உறவினர்களுக்கு சட்டப்படி உள்ளது. ஆனால் வடக்கில் மாவீரர்களை கொண்டாட இடமில்லை. புலிகள் அமைப்பின் சின்னம் அல்லது சீருடைகள் அல்லது அதன் படங்களைப் பயன்படுத்த முடியாது. நாட்டில் சட்டம் உள்ளது, சட்டப்படி புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு.

ஆனால் அது வடக்கோ, கிழக்கோ, தெற்கோ அல்லது மலையகமோ, எதுவாக இருந்தாலும், உங்கள் குழந்தைகளில் ஒருவர் இறந்தால், அந்தக் குழந்தையை நினைவுகூர உங்களுக்கு உரிமை உண்டு. அதன் மூலம் தடை செய்யப்பட்ட அமைப்புகளை நினைவு கூர்ந்து மீண்டும் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவார்கள் என்பதை சமூகம் நம்ப வேண்டியதில்லை.

இறந்த உறவினர்களை நினைவு கூரும் யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. அதனால்தான் வடபகுதி மக்கள் சில சமயங்களில் உறவினர்களை நினைவு கூர்வதற்கு வேறு அர்த்தம் கொடுக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

ஆனால் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகும், அவர்கள் தங்கள் சின்னங்கள், சீருடைகள், பேனர்களைப் பயன்படுத்தி கொண்டாடுவதற்கு இடமில்லை. ஆனால், இந்த நாட்டிலுள்ள எந்தவொரு நபரின் இறந்த உறவினரையும் நினைவுகூருவதை நாங்கள் ஒருபோதும் தடுக்க மாட்டோம்.

கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

அடுத்த மாதம் முதல் புதிய அடையாள அட்டைகள் டிஜிட்டல் வடிவில்

east tamil

கிளிநொச்சியில் கொதித்தெழுந்த சிவசேனை

Pagetamil

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

Leave a Comment