யாழ்ப்பாணத்தில் போதைப் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (23) தட்டாதெரு, கலட்டி அம்மன் கோயிலுக்கு அண்மையில் வைத்தியர் ஒருவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின் பகுதியை உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான முறைப்பாடு கிடைத்ததையடுத்து, யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அரசடி நல்லூர் பகுதியில் வைத்து கைது செய்தார்கள்.
அவர்கள் அப்பபணத்தில் 10 போதை மாத்திரையும் 240 மில்லிகிராம் ஹெரோயினும் வாங்கியுள்ளனர். கைது செய்யப்படும் போது அந்த போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
கைதான இருவரும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்றும், போதைப் பொருள் வாங்குவதற்காக சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுவதாக முதல் கட்டவிசாரனையில் தெரிய வந்தது.