நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய வைத்தியர் அர்ச்சுனா, முதலாவது நாடாளுமன்ற அமர்வலேயே தனது தற்குறித்தனத்தால் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தற்குறித்தனங்களால் மட்டுமே பிரபலமடைந்து, நாடாளுமன்ற உறுப்பினராகிய அர்ச்சுனா, இன்றைய முதல் நாள் அமர்வில், எதிர்க்கட்சி தலைவர் உட்காரும் ஆசனத்தில் உட்கார்ந்துள்ளார்.
நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில், உறுப்பினர்கள் விரும்பிய ஆசனங்களில் உட்காரலாமென்ற போதும், நாடாளுமன்ற சம்பிரதாயத்தின்படி, இடதுபுறம் முதலாவது ஆசனத்தில் எதிர்க்கட்சி கொறடாவும், இரண்டாவது ஆசனத்தில் எதிர்க்கட்சி தலைவர் உட்கார்வதும் சம்பிரதாயம்.
எனினும், அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் உட்கார்ந்துள்ளார். இது குறித்து பாராளுமன்ற பணியாளர்கள் விளக்கமளித்த போதும், தற்குறித்தனத்துடன் பதிலளித்தார்.
அத்துடன், இந்த சம்பவத்தை நேரலையில் தெரிவித்து விட்டு, தமிழன்டா என்றும் உளறிக் கொட்டியுள்ளார்.