முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டொக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் இன்று (21) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளனர்.
தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பான வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவையும் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நாளை (22) ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் அப்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.