விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரி. தொடர்ந்து ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய்யின் ‘த கோட்’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மருமகனும் நடிகருமான சுஷாந்த்தை காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
இதற்கு விளக்கம் அளித்துள்ள மீனாட்சி சவுத்ரி, “இதில் உண்மையில்லை. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகின்றன என எனக்குத் தெரியவில்லை. நான் பல படங்களில் நடித்துக் கொண்டிருப் பதால் மற்ற விஷயங்களுக்கு நேரம் இல்லை. யாரையும் காதலிக்கவில்லை. நான் தனியாகத்தான் இருக்கிறேன். பிரபாஸின் சலார் 2 படத்தில் நடிப்பதாக வரும் தகவலிலும் உண்மையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1