வவுனியாவில் ரிக்ரொக் ராசன், ரிக்ரொக் சாரு தகராறு பொலிஸ் நிலையம் வரை சென்றது!

Date:

வவுனியாவில் ரிக்ரொக் ராசனுக்கும், ரிக்ரொக் சாருவுக்குமிடையிலான தகராறு பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ரிக்ரொக் ராசனின் முறைப்பாட்டின் பிரகாரம், ரிக்ரொக் சாரு பொலிசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்து வவுனியாவில் தங்கியுள்ள ரிக்ரொக் ராசன் தொர்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், சில மாதங்களின் முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிக்ரொக் சாருவின் வாகனத்தை, ரிக்ரொக் ராசன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டதையடுத்து, தனது வாகனத்தை சாரு திரும்பி கேட்டுள்ளார். அதை, ரிக்ரொக் ராசன் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தினார்.

பின்னர், ரிக்ரொக் ராசனின் வசமிருந்த வாகனத்தை, ரிக்ரொக் சாரு மீட்டுள்ளார்.

அத்துடன், ராசனிற்கு எதிராக ரிக்ரொக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடக அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக முறையிடப்பட்டது.

இது தொடர்பில் ராசனின் முறைப்பாட்டினடிப்படையில், சாரு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ரிக்ரொக் ராசன், ரிக்ரொக் சாரு ஆகிய இருவரும் வெளிநாட்டிலிருந்து வந்து வவுனியாவில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்