மஸ்கெலிய பொலிஸ் பிரிவில், சுமார் 83 இலட்சம் பெறுமதியான வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலய குற்ற விசாரணைப் பிரிவினர் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொள்ளையிடப்பட்ட வாகனம் மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற திருவிழாவொன்றிற்கு கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சிலரை அழைத்து வந்த இந்த வாகனம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி அதிகாலை சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கஹவத்த பொலிஸ் பிரிவில் ஓபேவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபர் 28 வயதுடைய ஓபேவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக கடத்தப்பட்ட வாகனம், மாங்குளம், மல்லாவி பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் வலய குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.