ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, 311 மில்லியன் ரூபா நட்டஈடாக சட்டமா அதிபர் காரியாலயத்திற்கு கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (18) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். .
சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அடுத்த அமர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்ட விதம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.
பின்னர் சம்பந்தப்பட்ட மனுவை பெப்ரவரி 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.
தொடர்புடைய மனுக்கள் முர்து பெர்னாண்டோ, எஸ். துரை ராஜா மற்றும் ஏ. எச்.எம்.டி. நவாஸ் மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்டது.