இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மாவை சேனாதிராசாவை நியமிக்க வேண்டுமென, சி.சிறிதரன் தரப்பினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த பின்னணியில், கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தன்னை நியமிக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் பா.சத்தியலிங்கத்திடம், மாவை சேனாதிராசா எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றிருந்தது.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மாவை சேனாதிராசாவை நியமிக்க வேண்டுமென, சி.சிறிதரன் கட்சிக்குள் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியையும், தமிழ் தேசிய கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தக்கூடிய- அனுபவமுள்ள- தலைவரான அவர், நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற வேண்டுமென சிறிதரன் தரப்பினர் கோரியிருந்தனர்.
இந்த பின்னணியில், தேசியப்பட்டியல் உறுப்புரிமையை தனக்கு வழங்குமாறு மாவை சேனாதிராசா, கட்சியின் பதில் செயலாளர் பா.சத்தியலிங்கத்திடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவியை துறப்பதாக அவர் அனுப்பிய கடிதத்தை வாபஸ் பெறுமாறு, அவருக்கு சில தரப்பினர் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், அவர் தலைமை பதவியை துறப்பதாக எழுதிய கடிதத்தை வாபஸ் பெறுவதாக குறிப்பிட்டும், பதில் செயலாளருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தனர்.