கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மண்அகழ்வு

Date:

கிளிநொச்சியின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறறு வருகிறது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் விவசாய காணிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றனர் என்றும்
இதன் காரணமாக தங்களது விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுளளது என்றும் பொது மக்கள்கவலை தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கும் பொலீஸாருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதனால் அவர்கள் மீது பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பினை தடுக்கவும், விவசாய நிலங்களை
பாதுகாக்கவும் சட்டவிரோத மணல் அகழ்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்