‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Date:

நியூசிலாந்து அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளரான டிம் சௌத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.

2008 ஆம் ஆண்டு தன்னுடைய 19வது வயதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டிம் சௌத்தி அறிமுகமாகி இருக்கிறார். நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அணியின் கப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் டிம் சௌத்தி, 385 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் 200-க்கும் அதிகமான விக்கெட்களையும், ரி20 போட்டிகளில் 100 க்கும் அதிகமான விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். உலக அளவில் இந்த மைல்கல் சாதனையை செய்த ஒரே பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார் டிம் சௌத்தி. இந்நிலையில் 35 வயதுடைய டிம் சௌத்தி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். ஹாமில்டன் நகரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நடைபெற இருக்கிறது. அந்தப் போட்டியுடன் ஓய்வுப் பெற இருக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய உயர்ஸ்தானிகர்- ரில்வின் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள்...

казино онлайн 2025 играйте с уверенностью и безопасностью.1315

Самые надежные казино онлайн 2025 - играйте с уверенностью...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்