இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாய்க்கும், 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




