25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil
தமிழ் சங்கதி

வடக்கில் பணத்தை தண்ணீராக இறைக்கும் முக்கிய வேட்பாளர்கள்!

2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை போலவே, பணச் செலவும் அதிகரித்துள்ளது.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியவர்களின் குறைந்த பட்ச செலவுத் தொகை 2.5- 3 கோடி ரூபா என இருந்த போது, இம்முறை அது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக வேட்பாளர் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.

கடந்தமுறை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதனே மிகப்பெருமளவில் பணம் செலவிட்டதாக கருதப்படுகிறது. இம்முறையும் அவரே மிகப்பெரும் பணச்செலவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதிக பணம் செலவிடுபவர்கள், குறைந்த பட்ச பணச்செலவை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக செலவிடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அங்கஜன் தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்வார்… எப்படியன வாக்குறுதியையும் கொடுப்பார்… எந்த நாடகமும் அரங்கேற்றுவார் என்பது கடந்த தேர்தல்களில் தெரிந்தது. கோட்டாவின் கூட்டாளியாக தேர்தலில் களமிறங்கினாலும், உள்ளூரில் மக்களை ஏமாற்ற, விடுதலைப் புலிகளின் பாடல்களையும் ஒலிக்க விடும் காரியக்காரன்.

கடந்த தேர்தலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு விடயத்தை கையிலெடுத்து களமிறங்கினாலும், அந்த கனவு பாழாகி விட்டது. அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கு கூட வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. அரசாங்கத்தின் மாவட்ட ஒதுக்கீடுகளையெல்லாம், தனது திட்டங்கள் என குறிப்பிட்டு இம்முறை பிரச்சார துண்டுப்பிரசுரம் வெளியிட மட்டும்தான் அவரால் முடிந்தது.

இம்முறையும் தேர்தலில் வெற்றிபெற கோடிகோடியாக அவர் கொட்டுகிறார். அவரே யாழ் மாவட்டத்தில் பெருந்தொகையாக பணத்தை செலவிடுகிறார். இம்முறையும் தேர்தல் செலவில் அவரே முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.

யாழ் மாவட்டத்தில் இரண்டாமிடத்தில் யார் அதிகமாக செலவிட்டார்கள் என்பது, தேர்தல் முடிவின் பின்னரே அண்ணளவாக கணிக்க முடியும்.

இருந்தாலும், தற்போது பணத்தை தண்ணீராக இறைப்பவர்களில் ரெலோ அமைப்பின் சுரேன் குருசாமியும் ஒருவர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரான அவர், இம்முறை வெற்றியீட்ட வேண்டுமென்ற வெறியுடன் பணத்தை தண்ணீராக இறைக்கிறார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் பலருக்கு லைக்கா நிறுவனம் பணம் வழங்கியுள்ளது. லைக்கா நிறுவனத்துக்கும் அரசியலுக்குமான தொடர்பு வழியாக ரெலோவும் உள்ளது. இதனால்தான், பொதுத்தேர்தலின் முன்பாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் லைக்கா நிறுவனத்தின் கட்சியையும் இணைக்க வேண்டுமென்ற யோசனையை ரெலோ சமர்ப்பித்திருந்தது. எனினும், ஏனைய கட்சிகள் அதை ஏற்காததால் அந்த யோசனை பிசுபிசுத்தது.

ரெலோ தரப்பிற்கு லைக்காவின் பண அனுசரனை தாராளமாக கிடைத்துள்ளது. அது சுரேன் வழியாகவும் கொட்டுகிறது.

பார் பொமிற் மான் குட்டிகள் என கிண்டலடிக்கப்படும் வி.மணிவண்ணன் தரப்புக்கும் லைக்கா பண அனுரசனை கிடைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மணிவண்ணன் தரப்பின் பிரச்சாரத்தில் பணம் கொட்டப்படுவதற்கு, விக்னேஸ்வரன் பார் பொமிற்றை விற்ற பணம் செலவிடப்படுவதாக சிலர் கருதுகிறார்கள். அது உண்மையில்லை. விக்னேஸ்வரன் மூலம் பார் பொமிற் வந்தது உண்மையென்றாலும், மணி தரப்பின் தேர்தல் செலவில் அந்த பணம் செலவிட வாய்ப்புக் குறைவு. ஏனெனில், லைக்கா அனுசரனை கிடைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சடிபடுகிறது.

இதுதவிர, கடந்த தேர்தலிலும் பணத்தை தண்ணீராக செலவிட்டவர்களில் உதயன் ஈ.சரவணபவனும் ஒருவர். இம்முறை சுயேச்சையாக களமிறங்கியுள்ளார். இம்முறையும் பணத்தை தாராளமாக அள்ளியிறைக்கிறார். இம்முறை அவர் வெற்றியீட்ட வாய்ப்பில்லா விட்டாலும், ஏதோ நம்பிக்கையில் பணத்தை செலவிடுகிறார்.

அவரது உதயன் பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள வீடு, ஆறுதிருமுகனின் சைவ அமைப்புக்கு உரிமையாளர்களால் வழங்கப்பட்டு விட்டது. எனினும், சரவணபவன் வீட்டை கையளிக்க மறுக்கிறார். சரவணபவன் தரப்பை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு, ஆறுதிருகன் நீதிமன்றத்தை நாடியுள்ளார். சரவணபவனுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தில் ஆறுதிருமுருகனும் பங்களிக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதேவேளை, வன்னித் தேர்தல் தொகுதியில் சுயேட்சை அணியாக களமிறங்கியுள்ள எமில் காந்தனே அதிக பணத்தை செலவிடுகிறார். வடக்கு கிழக்கில் அதிக பணம் செலவிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரும் இடம்பிடிப்பார் என கருதப்படுகிறது.

பத்திரிகைகளில் நாளாந்தம் அவரது செய்திகள் வெளிவருமளவுக்கு- பணம் பாதாளம் வரை பாயவிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
+1
2
+1
3

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

உட்கட்சி மோதலால் திண்டாடும் ரெலோ!

Pagetamil

சந்திக்கு வருகிறது உள்வீட்டு மோதல்: ரெலோவும் நீதிமன்ற படியேறுகிறது!

Pagetamil

Leave a Comment