இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவராக செயற்பட்ட மாவை சேனாதிராசா, இம்முறை பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியை ஆதரிக்க மாட்டார். தனிப்பட்ட ரீதியாக தன்னையே ஆதரிப்பார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார் சசிகலா ரவிராஜ்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சங்கு சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ், இன்று (2) யாழ் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் தன்னை தேர்தலில் போட்டியிட அழைத்ததாகவும், ரெலோ தரப்பில் மாத்திரம் வெற்றிடமிருந்ததால் அந்த கட்சியின் ஊடாக வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
1
+1
+1
+1