26.3 C
Jaffna
December 14, 2024
Pagetamil
விளையாட்டு

ஷுப்மன் கில் உடனான பேச்சு தோல்வி? – விராட் கோலி மீண்டும் ஆர்சிபி கப்டனாக வாய்ப்பு

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணியின் கப்டனாக மீண்டும் விராட் கோலி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி கப்டன்சி தொடர்பாக ஷுப்மன் கில்லுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும் ஒரு சில ஊடக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

விராட் கோலி 2013 முதல் 2021 வரை ஆர்சிபி கப்டனாக இருந்தார். பிறகு கப்டன்சியை உதறினார். 2022 முதல் 2024 வரை ஆர்சிபி கப்டனாக ஃபாப் டு பிளெசிஸ் நீடித்தார். இந்நிலையில் மெகா ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலியை மீண்டும் கப்டனாக்குவது என்று ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 2021 சீசன் முடிவதற்கு முன்பு ஆர்சிபி கப்டன் பொறுப்பை உதறுவதாக கோலி அறிவித்தார். இவரது தலைமையின் கீழ் ஆர்சிபி ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை என்ற அதிருப்தி நிலவி வந்தது. ஆனால், கோலியை மாற்றி வேறு கப்டன் நியமிக்கப்பட்ட போதும் ஆர்சிபி-யின் தோல்வி முகம் நீடிக்கவே செய்கிறது.

விராட் கோலி ஆர்சிபி கப்டனாகிறார் என்ற செய்தியும், ஃபாப் டு பிளெசிஸ் அணியில் தக்க வைக்கப்பட மாட்டார் என்ற செய்தியும் இணைந்தே கவனிக்கப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் கப்டன் ஷுப்மன் கில்லை ஆர்சிபி அணிக்கு இழுத்து கப்டன்சியை அவர் தலையில் கட்டலாம் என்று ஆர்சிபி அணி நிர்வாகம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட ஒக்டோபர் 31ஆம் திகதி வரை கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கொல்கத்தாவைச் சாம்பியன்களாக்கிய அந்த அணியின் கப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொல்கத்தாவில் நீடிக்கப்போவதில்லை என்ற செய்திகளும் வெளிவந்துள்ளது. அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை தக்கவைத்து அவரிடம் கப்டன்சி அளிக்கலாம் என்ற பேச்சுக்களும் ஐபிஎல் வட்டாரங்களில் எழுந்து வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment