27 C
Jaffna
November 4, 2024
Pagetamil
இலங்கை

சில எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 377 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

அத்துடன் 319 ரூபாயாக காணப்பட்ட லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

லொஹான் ரத்வத்த கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்!

Pagetamil

1,700 ரூபா சம்பள நாடகமாடியவர்கள் வீட்டுக்கே சென்றுவிட்டார்கள்

Pagetamil

இராணுவத்தினருக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டளை

Pagetamil

தேசிய மக்கள் சக்திக்கு தமிழர்கள் வாக்களிப்பதால் ஏற்படவுள்ள பேராபத்து- பா.கஜதீபன் சுட்டிக்காட்டல்

Pagetamil

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைவுக்கு உண்மையான காரணம் என்ன?- வெளிப்படுத்துகிறார் த.சித்தார்த்தன்!

Pagetamil

Leave a Comment