திரையுலகினர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முக அழகை மாற்றுவது வழக்கமானதுதான். ஸ்ரீதேவி முதல் ஸ்ருதி ஹாசன் வரை பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. புருவத்தை அழகுபடுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா, கன்னம் மற்றும் மூக்குப் பகுதியில் சர்ஜரி செய்துள்ளதாகவும் உதட்டில் ‘லிப் ஃபில்லர்’களைப் பயன்படுத்தி யிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதை நயன்தாரா மறுத்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், “புருவத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான். அதை அழகுபடுத்த அதிக நேரம் எடுத்துக்கொள்வேன். ஏனென்றால் அதுதான் எனக்கு உண்மை யான ‘கேம் சேஞ்சர்’. அடிக்கடி அதில் வித்தியாசம் தெரிவதால், என் முகத்தில் ஏதோ மாற்றம் செய்திருக்கிறேன் என நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை. டயட் காரணமாக உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அதனால் என் கன்னங்கள் ஒட்டி இருப்பது போலவும் தடித்து இருப்பது போலவும் தெரிகின்றன. அவ்வளவுதான். வேறொன்றுமில்லை” என்று கூறியுள்ளார்.