வேலிக்கு மண் போடும் விவகாரத்தில் சிறிதரன்- சுமந்திரன் ஆதரவாளர்கள் மோதல்!

Date:

தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களிடையே முரண்பாடு ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபுரம் – மணியங்குளம் வீதியில் குறித்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றுக்கு வீதியோர மண்ணை வேலிக்கு கனரக வாகனம் மூலம் அணைக்க முற்பட்டுள்ளார். குறித்த விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் திரண்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த செயற்பாட்டில் ஈடுபட்ட சிறிதரனின் ஆதரவாளருக்கும், தடுக்க முற்பட்ட சுமந்திரனின் ஆதரவாளருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட நபர் சுமந்திரனின் ஆதரவாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட சிறிதரனின் ஆதரவாளரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் சட்டவிரோத செயற்பாட்டுக்கு பயன்படுத்திய கனரக வாகனத்தை பொதுமக்கள் இணைந்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

உறுப்பு தானம் மூலம் பிறர் வாழ்வை வளப்படுத்தி மறையாத மாமனிதர்கள்!

யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரக தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம் உலக உடல் உறுப்பு...

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: ஊழியர்களின் முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை தொடர்பில்...

28 வயது காதலனுக்காக குழந்தையை வீதியில் விட்டுச்சென்ற 38 வயது தாய்

வத்தேகம பொலிஸ் பிரிவின் யதிரவன பகுதியில் உள்ள ஒரு குறுக்குச் சாலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்