Pagetamil
முக்கியச் செய்திகள்

வடக்கிற்குள்ளும் புகுந்தது ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்

மேல் மாகாணத்தில் முதன்முறையாக பதிவாகிய ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் தற்போது ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பதிவாகியுள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் கே.கே.சரத் தெரிவித்தார்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருப்பதாகவும், இந்த நோயைக் கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேல் மாகாணத்தில் 4 பண்ணைகளில் மேற்படி ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக மாகாண பணிப்பாளர் கே.கே.சரத் ​​சுட்டிக்காட்டினார்.

மேல் மாகாணத்தின் பேருவளை, வெலிசறை, பாதுக்க ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தரவுகளின்படி, மேல் மாகாணத்தில் சுமார் 70,000 பன்றிகள் உள்ளன, அவற்றில் 20,000 முதல் 25,000 வரை இந்த நோயினால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!