யானை தாக்கி இளைஞன் பலி

Date:

முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு கிராமத்திற்குள் காட்டு யானை தாக்கியதில் இளைஞன் பலியானார்.

முல்லைத்தீவு – முத்துவிநாயகபுரம் முத்துஐயன்கட்டு பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரின் உடல் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு ஒட்டுசுட்டான் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக குறித்த யானை விவசாயிகளின் மக்கள் குடியிருப்பு பகுதியில் நின்று அட்டகாசம் செய்து வருவதால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றார்கள்.

வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு நேரத்திற்கு அறிவித்தும் உடன் நடவடிக்கை எடுக்காததால் ஒரு உயிர் பிரிந்துள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அமைச்சரின் மைத்துனர் மோசடி விவகாரத்தில் கைது!

வாகன ஏலம் தொடர்பான நிதி மோசடி வழக்கில், அமைச்சர் கே.டி. லால்...

இன்றைய ராசி பலன் | 12.08.2026

♈ மேஷம்: புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கிய முடிவுகளை...

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 9 வீதியின் 155வது மைல்கல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்