25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil
இலங்கை

முன்னாள் போராளி மீது தாக்குதல்: சி.சிறிதரன் தரப்பினர் மதுபோதையில் அட்டகாசம்! (video)

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் போட்டியிடுகின்ற முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரப் பணியில்
ஈடுபட்டிருந்த சமத்துவக் கட்சியின் மாவட்ட அமைப்பாளரான முன்னாள் போராளி
வேங்கை மீது தமிழரசு கட்சியின் உள்ளுராட்சி மன்ற ஸ்கந்தபுரம் வட்டார
வேட்பாளர் அகிலன் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று (27) மாலை 5.30 மணிக்கு ஸ்கந்தபுரம் சந்தியில்
இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மு.சந்திரகுமாருக்கு ஆதரவாக ஸ்கந்தபுரம் பிரதேசத்தில் பெண்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த இடத்திற்கு மது போதையில் சென்ற அகிலன் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் மிகவும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தமது ஏரியா, இங்கு எவரும் நுழைய முடியாதென ரௌடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது அவ்விடத்திற்கு சென்ற வேங்கை அவர்கள் பிரச்சார செய்வதற்கு
அனைவருக்கும் உரிமை உண்டு, பிரச்சாரம் என்பது ஐனநாயக செயற்பாடுகளில்
ஒன்று எனவே எங்களுடைய கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும்
செயற்பாட்டிற்கு நீங்கள் இடையூறு செய்வது முறையல்ல குறிப்பாக பெண்களிடம்
அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி முரண்படுவது பண்பான
செயற்பாடல்ல என தெரிவித்த போதே வேங்கை மீது அகிலன் தாக்குதலை
மேற்கொண்டுள்ளார்.

இதன் போது அகிலன் மதுபோதையில் இருந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 11 வயது மகன் பலி

Pagetamil

கொழும்பிலிருந்து நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் கைது!

Pagetamil

யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

Pagetamil

தேடப்படும் தென்னக்கோன் இன்று சட்டத்தரணி ஊடாக சரணடையலாம்?

Pagetamil

இலஞ்சம் வாங்கிய இரு பொலிசார் கைது!

Pagetamil

Leave a Comment