2024 ஆம் ஆண்டிற்கான விதைப்பந்து திருவிழாவின் இறுதி மற்றும் பிரதான
நிகழ்வான விதைப்பந்துகளை தெரிவு செய்யப்பட்ட அக்கராயன் ஒதுக்கப்பட்ட
காட்டினுள் வீசும் நிகழ்வானது 25.10.2024 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை
08.30 மணியளவில் ஓராயம் அமைப்பின் அனுசரணையுடன் கிளி/ விவேகானந்த
வித்தியாலத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை நடைப்பெற்றன.
இதன் போது விவேகானந்த வித்தியாலய மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சுமார் 10
ஆயிரத்திற்கு மேற்பட்ட விதைபந்துகள் அக்கராயன் காட்டிற்குள் தெரிவு
செய்யப்பட்ட இடங்களில் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் அதிகாரிகளாலும்
எறியப்பட்டுள்ளன.
இன்று உலகம் எதிர்கொள்கின்ற மிக முக்கியமான ஆபத்தான பிரச்சினையான காலநிலை மாற்றம் காணப்படுகிறது. காடழிப்பு உட்பட எமது சுற்றுச் சூழலில்
ஏற்படுகின்ற பாதிப்புக்களின் விளைவாக இது அமைந்துள்ளது எனவே எமது சூழலை
பாதுகாத்து அடுத்த சந்ததியினருக்கு கொடுப்பதற்காகவும் மாணவர்கள்
மத்தியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்
நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக பிரயோக விஞ்ஞான பீட
சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.எம். றியாஸ் அகமட் மத்திய சுற்றாடல்
அதிகாரசபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் சி. லதீஸ்குமார், வன பாதுகாப்புத்
திணைக்களத்தின் வனவிரிவாக்க உத்தியோகத்தர் கிளிநொச்சி மகா வித்தியாலய
பிரதி அதிபர் அரவிந்தன் சூழலியலாளாரும் இலங்கை வனவிலங்குள் இயற்கை
பாதுகாப்புச் சங்கத்தின் வட மாகாண பிரதிநிதியுமான ம சசிகரன்
ஊடகவியலாளரும் சூழலியலாளருமான மு. தமிழ்ச்செல்வன் கிளி/ கிளிநொச்சி
மத்திய கல்லூரி, கிளி/ திருவையாறு மகா வித்தியாலயம் மற்றும் கிளி/
இராமநாதபுரம் மகா வித்தியாலயம் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர்
கலந்துகொண்டனர்.