திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தார்கள்.
மூளைக்கு செல்லும் குருதி தடைப்படுவதால் ஏற்படும் பாதிப்பு (Stroke) சிறியளவில் ஏற்பட்டதால், நேற்று மாலை திடீர் உடல்நலக்குறைவுக்கு உள்ளாகிய மாவை சேனாதிராசா, திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவருக்கு தீவிரமான உடல்நல பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1