வெலிவேரிய பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்களை கொடூரமாக தாக்கி, கணவன் மற்றும் நான்கு வயது பிள்ளையை கட்டி வைத்து, மனைவியை வன்புணர்ச்சி செய்து, சொத்துக்களை கொள்ளையடித்த சப்புகஸ்கந்த உத்தித்த பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரையும் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சபுகஸ்கந்த உத்தித்த பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும் அவரது தாயாரின் சட்டபூர்வமற்ற கணவரும் இணைந்து இந்தக் குற்றங்களைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குற்றங்கள் அனைத்தும் சந்தேகநபரின் தாயாருக்குத் தெரிந்தே செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் அவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிவேரிய, கிரிந்திவெல, அஹெலியகொட உள்ளிட்ட 8 பிரதேசங்களில் உள்ள வீடுகளில் 21 வயதுடைய இந்த மகனும், தாயின் தகாத கணவரும் புகுந்து பெண்களை வன்புணர்ச்சி செய்து சொத்துக்களைச் சூறையாடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த குற்றங்களுக்கு தலைமை தாங்கும் 47 வயது நபர் கராத்தே மாஸ்டர் ஆவார். மேலும் அவர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய சில கூரிய ஆயுதங்கள், மற்றும் பிற ஆயுதங்களையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
21 வயதான சந்தேக நபர் மற்றும் அவரது தாயாரின் சட்டபூர்வமற்ற கணவரான 47 வயதுடைய நபர் வெலிவேரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு சில நாட்களுக்கு முன்னர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இந்த வீட்டின் உரிமையாளர் தனியார் நிறுவனத்தில் மூத்த அதிகாரி. அவரது மனைவி ஐடி பொறியாளர். அப்போது அவர்களது நான்கு வயது குழந்தையும் வீட்டில் இருந்துள்ளது.
இந்த இரண்டு குற்றவாளிகளும் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த அனைவரின் ஆடைகளையும் கிழித்து நிர்வாணமாக்கியுள்ளனர்.
பின்னர், கணவன் மற்றும் குழந்தையின் கைகளை கட்டி வைத்துவிட்டு வீட்டின் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, கணவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மனைவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
21 வயதுடைய இளைஞனும், அவனது தாயின் முறைகேடான கணவனும் மாறி மாறி அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்ததுடன், சந்தேகநபர்கள் அந்தக் காட்சிகள் அனைத்தையும் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்.
பின்னர், இரண்டு சந்தேக நபர்களும் மொபைல் போனை வீட்டின் கழிவறையில் வைத்துள்ளனர்.
இரண்டு குற்றவாளிகளும் அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் வீட்டில் இருந்தே இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர், வீட்டில் இருந்த பெறுமதியான சொத்தை கொள்ளையடித்துக்கொண்டு குற்றவாளிகள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்தக் குற்றச் செயல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கம்பஹா பிரதேசத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் விழிப்புடன் இருக்க ஏற்பாடு செய்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், இரவு நேரங்களில் அவசர வீதித் தடைகளை பயன்படுத்தி இரகசியமாக விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்துள்ளார்.
இதற்கிடையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த இரண்டு குற்றவாளிகளையும் அடையாளம் காண முடிந்தது.
இதேவேளை, கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று அதிகாலை தமது பொலிஸ் பகுதியில் இரவு கடமையில் ஈடுபட்டிருந்த போது, இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.
இப்படி மாட்டிக் கொண்ட இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரிடமும் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதில், வெலிவேரிய வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணை வன்புணர்வு செய்து சொத்துகளை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையடிக்கும் தங்க ஆபரணங்களை 21 வயதுடைய இளைஞனின் தாயார் விற்பனை செய்து அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு குற்றவாளிகளுக்கும் எதிராக கிரிந்திவெல, ருவன்வெல்ல அஹெலியகொட மற்றும் ஏனைய பொலிஸ் நிலையங்கள் உட்பட பல பகுதிகளில் குற்றச் சாட்டுகள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



