கசிப்புடன் ஒருவர் கைது

Date:

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி பகுதியில் கசிப்புடன் சந்தேக நபரொருவர் இன்று வியாழக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அராலித்துறை பகுதியில் நீண்ட நாட்களாக இந்த நபர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவருவதாக இரகசிய தகவல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையிலேயே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பின்போது சந்தேக நபரின் வீட்டிலிருந்து 07 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மீட்கப்பட்ட கசிப்புடன் சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர், சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்