எதிர்வரும் பொதுத்தேர்தலில் சுயேச்சை அணியாக களமிறங்கியுள்ள வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மனநோயாளர் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு சென்ற அர்ச்சுனா, அங்குள்ளவர்கள் சிலருக்கு பானங்கள் வழங்கினார்.
சக வைத்தியர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பிய இராமநாதன் அர்ச்சுனா, தனது அவதூறுகளுக்கான ஆதாரங்களை முன்வைக்க முடியாமல் போனதையடுத்து, அண்மையில் சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில், தனக்கு உளச்சிக்கல்கள் உள்ளதாகவும், விபரீதமான முடிவெடுக்கப்போவதாகவும் சிறைச்சாலை வைத்தியரிடம் கூறியதையடுத்து, அர்ச்சுனா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மனநோயாளர் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தார்.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் நிலையில், இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். நோயளர்களை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படும் நேரத்தில், பொதுமகனை போல வைத்தியசாலைக்குள் நுழைந்த அர்ச்சுனா, தான் சிகிச்சை பெற்ற மனநோயாளர் பிரிவு உள்ளிட்ட விடுதிகளிற்கு சென்று, அங்குள்ளவர்களுக்கு பானங்களை வழங்கியதை அவதானிக்க முடிந்தது.