டப்ளியு.எம். மெண்டிஸ் மற்றும் கம்பெனி லிமிடெட்டின் மூன்று பணிப்பாளர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (14) மறுத்துள்ளது. பணிப்பாளர்களான, அர்ஜூன் அலோசியஸ், ஏ.ஆர். தினேந்திர ஜோன் மற்றும் பிரசன்ன குமாரசிறி டி சில்வா ஆகியோரின் பிணை மேன்முறையீடு நிலுவையில் உள்ளது.
3.5 பில்லியன் ரூபாய் பெறுமதி சேர் வரி (VAT) செலுத்தத் தவறியதற்காக மூன்று பணிப்பாளர்களுக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த உத்தரவை எதிர்த்து பிரதிவாதிகள் கொழும்பு மேல் நீதிமன்றில், நீதவான் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தின் ஊடாக மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
எனினும், பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1