தென்னிலங்கை போன்று வடக்கு அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் – முன்னாள் எம்பி சந்திரகுமார்

Date:

தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் போன்று வடக்கிலும் ஏற்பட வேண்டும் அப்போதுதான் தமிழ் மக்களும் அதன் நன்மைகளை அனுபவிக்க முடியும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் முன்னாள் எம்பி மு . சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று கிளிநொச்சியில் தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவிததுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் தொடர்ச்சியாக அரசியல்
அதிகாரங்களில் இருந்து வருகின்றவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை கூட நிறைவு செய்யவில்லை மீள் குடியேற்ற காலத்தில் நான் அதிகாரத்தில் இருந்த போது மக்களை தேடித் தேடி செய்த பணிகளில் சிறிதளவேனும் பின்னர் தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்தவர்கள் மேற்கொள்ளவில்லை. வெறுமனே அறிக்கைகளை விட்டுக்கொண்டும், பாராளுமன்றத்தில்
பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் போன்று போட்டி போட்டுக்கொண்டு பேசி தங்களை தெரிவு செய்து அனுப்பி மக்களின் பணி முடிந்துவிட்டு காலத்தை கடத்தியவர்கள் மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். வாக்களித்த மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற மனசாட்சி இன்றி மக்கள்
முன் வருகின்றவர்களை மக்கள் இந்த தேர்தலில் நிராகரிக்க வேண்டும்.

இந்த 15 ஆண்டுகளில் இவர்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியிலான உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை, அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுக்கவில்லை. இவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சாபக்கேடானவர்கள்.இவர்களால் மக்களுக்கும் மண்ணுக்கும் எந்த நன்மையும் இல்லை. எனவே மக்கள் இந்த தேர்தலை தென்னிலங்கை போனற் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக மாற்ற வேண்டும்.

அதிகாரத்தில் இருந்த போதும் சரி அதற்கு பின்னரான காலத்திலும் சரி இந்த மண்ணில் தொடர்ச்சியாக இந்த மக்களுடன் மக்களுக்காக களப் பணியாற்றிவர்கள் நாம். எப்பொழுதும் மக்களுக்காகவே உழைத்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு மிக குறைவு: ட்ரம்ப்

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,...

விளக்கமறியலில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரியை பணியிடை நீக்க நடவடிக்கை

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான காவல்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்...

பிரகீத் எக்னொலிகொட வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தவை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு, அதன் பின்னர் காணாமல் போன சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்