திருமண நிகழ்வில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அங்குலான சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பு சமூக மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குலான பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமண விழாவின் ஒலியை குறைக்குமாறு டி.ஜேவிடம் இந்த நபர் கேட்டபோது, அதை குறைக்க முடியாது என்று அவர் கூறியபோது, இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த வாக்குவாதத்திற்கு மத்தியில் ஒரு நபர் அவரை தாக்கி தலையில் பலத்த காயம் ஏற்படுத்தியதால் தான் இந்த கொலை நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அங்குலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.