ஜனநாயக தேசிய கூட்டணியென்ற பெயரில் தேர்தலில் போட்டியிடும் அணியின் அறிமுக நிகழ்வும் ஆரம்ப பரப்புரைக்கூட்டமும் இன்று நடைபெற்றது.
இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.